இதனால் தான் ஒல்லி ஆனேன்: பிக் பாஸ் லாஸ்லியா சொன்ன ஷாக் விஷயம்
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதற்கு பிறகு விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வந்தவர் லாஸ்லியா.
ஹீரோயின்
பிக் பாஸுக்கு பிறகு லாஸ்லியா ஹீரோயினாக தற்போது படங்களில் நடித்து வருகிறார். பிரென்ட்ஷிப் என்ற படத்தில் அவர் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். அதற்கு பிறகு தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
அஸ்வின் உடன் ஜோடியாக அவர் 'பேபி நீ சுகர்' என்ற பாடலில் ஆடி இருக்கிறார் லாஸ்லியா. அந்த பாடல் நாளை ரிலீஸ் ஆகிறது.
ஒல்லி ஆனது ஏன்?
இந்நிலையில் லாஸ்லியா சினிஉலகத்திற்க்கு அளித்திருக்கும் பேட்டியில் பல விஷயங்கள் பற்றி ஓப்பனாக பேசி இருக்கிறார்.
முன்பு இருந்த chubby லாஸ்லியாவை தான் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த நிலையில் அவர் ஏன் ஒல்லி ஆனார் என கேட்டதற்கு, "எனக்கு Health Issues இருந்தது, அதனால் தான் எடையை குறைக்க வேண்டி இருந்தது. முன்பு நான் ஒல்லியாக தான் இருந்தேன். பிக் பாஸ் வரும்போது எனக்கு weight போட்டிருந்தது. தற்போது மீண்டும் ஒல்லியாகி இருக்கிறேன்."
"Screen-ல் பெரிதாக தெரிவேன். இது (சினிமா) தான் என் துறை என முடிவெடுத்துவிட்டேன். அதற்காக தான் கடின உழைப்பை போட விரும்புகிறேன். இது இரண்டும் தான் நான் ஒல்லியாக காரணம்" என் லாஸ்லியா கூறி இருக்கிறார்.
நானும் பாதிக்கப்பட்டேன், எதிரியை கூட இப்படி பண்ணாதீங்க: வனிதா விஜயகுமார் உருக்கம்