பாகுபலி நடிகர், நடிகைக்கு திருமணம்.. மறைந்த முக்கிய நபரின் கடைசி ஆசையாம்
ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பாகுபலி. இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்திருந்தார். இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தவர் பிரபாஸ்.
பிரபாஸ் - அனுஷ்கா
இவரும் நடிகை அனுஷ்காவும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் என்று சில வருடங்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
சமீபத்தில் பிரபாஸின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜு தீடீரென மரணமடைந்தார். அவர் அனுஷ்காவுக்கும் பிரபாஸுக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று ஆசைபட்டாராம். ஆனால், அது அவர் உயிருடன் இருக்கும் வரை நடக்கவில்லை.
விரைவில் திருமணம்
இதனால், அவருடைய மறைவுக்கு பின்பு கண்டிப்பாக இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. கிருஷ்ணம் ராஜு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தபோது, அனுஷ்கா மட்டும் சென்று அவரை சந்தித்ததாக தகவல் வெளியானது.
இதனால், பிரபாஸ் - அனுஷ்கா திருமணம் கண்டிப்பாக நடக்கும் என தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் அவர்களுடைய அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக.

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
