அனுஷ்கா ஷெட்டிக்கு சோதனை மேல் சோதனை! ஏன் இப்படி என புலம்பும் ரசிகர்கள்

By Parthiban.A Jul 29, 2023 02:50 PM GMT
Report

நடிகை அனுஷ்கா ஷெட்டி ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இருப்பினும் அவர் நீண்ட காலமாக உடல் எடையை குறைக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார். அதற்காக அனுஷ்கா பல சிகிச்சைகள் செய்தாலும் பலனில்லை.

இந்நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு அவர் Miss Shetty Mr Polishetty என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தில் அவருடன் நவீன் பொலிஷெட்டி நடித்து இருக்கிறார்.

அனுஷ்கா ஷெட்டிக்கு சோதனை மேல் சோதனை! ஏன் இப்படி என புலம்பும் ரசிகர்கள் | Anushka S Miss Shetty Mr Polishetty Postponed

தள்ளிப்போன படம்

Miss Shetty Mr Polishetty படம் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் தற்போது திடீரென படம் ரிலீஸ் நிறுத்தப்பட்டதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடியவில்லை என தயாரிப்பாளர் காரணம் கூறினாலும், அந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது தான் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அதனால் புது ரிலீஸ் தேதி அறிவித்து ப்ரோமோஷன் பணிகளை மேலும் அதிகமாக செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் சோதனை மேல் சோதனை என அவரது ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். 

ஜெயிலர் விழாவில் விஜய் பட பாடல்.. டென்ஷன் ஆகி நிறுத்தசொன்ன ரஜினி ரசிகர்கள் - வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US