உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்கவரும் நடிகை அனுஷ்கா.. அதுவும் காமெடி கதைக்களத்தில்
மீண்டும் நடிக்க வரும் நடிகை அனுஷ்கா
தமிழ் சினிமாவில் கொடிகட்டி முன்னணி நடிகையாக பறந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவர் தமிழில் விஜய், அஜித், ரஜினிகாந்த், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருந்தார்.
உடல் எடை அதிகரித்ததன் காரணமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக நிசப்தம் எனும் திரைப்படம் வெளிவந்தது.

இந்நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார் நடிகை அனுஷ்கா. ஆம், தற்போது காமெடி கதைக்களம் கொண்ட புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, வளர்ந்த வரும் ஹீரோ ஒருவர் கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.