கையில் சுருட்டுடன் நடிகை அனுஷ்கா.. பிறந்தநாளில் வெளிவந்த போஸ்டர் இதோ
அனுஷ்கா ஷெட்டி
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. அருந்ததி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை அனுஷ்கா தமிழில் விஜய்யுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.
பாகுபலி 1 மற்றும் 2 ஆகிய படங்களின் வெற்றிக்கு பின் அனுஷ்கா நடித்த படங்கள் பெரிதளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இன்று நடிகை அனுஷ்காவின் பிறந்தநாள் என்பதினால் அவருக்கு வாழ்த்துக்களை குவிந்து வருகிறது.
கையில் சுருட்டுடன் அனுஷ்கா
இந்த நிலையில், அடுத்ததாக அனுஷ்கா நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். தெலுங்கில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் க்ரிஷ் ஜகர்லமுடி. இவருடைய இயக்கத்தில் வானம் படத்தில் அனுஷ்கா நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து மீண்டும் தற்போது கிரிஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் Ghaati எனும் படத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளார். அனுஷ்காவின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக Ghaati படத்தின் First லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் கையில் சுருட்டுடன் ரத்த காயங்களுடன் இருக்கிறார் அனுஷ்கா. இதோ அந்த போஸ்டர் நீங்களே பாருங்க..


இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
