நடிகை அனுஷ்கா ஷெட்டி எடுத்த திடீர் முடிவு... வருத்தத்தில் ரசிகர்கள்
அனுஷ்கா ஷெட்டி
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.
பாகுபலியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் நிறைய படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் சினிமாவில் இருந்து விலகியது போல் உள்ளார். இப்படத்திற்கு பிறகு சில படங்கள் நடித்தார், ஆனால் எதுவுமே வெற்றிப்பெறவில்லை.
இடையில் உடல் எடை கூடிய அனுஷ்கா ஷெட்டி கேமரா பக்கமே வராமல் இருந்தார். அனுஷ்கா நடிப்பில் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் வெளியாகி சுமாரான வரவேற்பு பெற்றது.
இன்ஸ்டா பதிவு
அந்த படத்திற்கு பிறகு கடந்த செப்டம்பர் 5ம் தேதி அனுஷ்கா ஷெட்டி நடித்த காதி திரைப்படம் வெளியாகி இருந்தது. ஆனால் படம் சுத்தமாக ஓடவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷெட்டி தான் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக பதிவு போட்டுள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமான விஷயமாக அமைந்துள்ளது.