43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை
அனுஷ்கா
சூர்யா, விஜய், அஜித் என தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. தென்னிந்திய சினிமாவில் டாப் கதாநாயகியாக வலம் வந்த இவர் கடைசியாக பாகுபலி 2 எனும் ப்ளாக் பஸ்டர் படத்தை தந்தார்.
அதன்பின் இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஹிட்டாகவில்லை. மேலும் தமிழ் சினிமாவில் நடித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தற்போது விக்ரம் பிரபு உடன் இணைந்து காட்டி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிபோய் கொண்டே இருக்கிறது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
அனுஷ்காவை பற்றி எப்போது செய்தி வெளிவந்தாலும், அவருடைய திருமணம் பற்றிய பேச்சும் எழுந்துவிடும். பாகுபலி படத்தின் சமயத்தில் நடிகர் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா காதலித்து வந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டும்தான் என கூறி அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.
முதல் காதல்
43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா, பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார்.
"நான் 6ம் வகுப்பு படிக்கும்போது, என் வகுப்பில் இருந்து ஒரு பையன் என்னிடம் வந்து, 'நான் உன்னை காதலிக்கிறேன்' என கூறினான். அவன் என்னை உயிருக்கு உயிராக நேசிப்பதாக சொன்னான். அந்த நேரத்தில் 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்றால் என்ன அர்த்தம் என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆனால், 'சரி' என அந்த காதலை ஏற்றுக்கொண்டேன். காதல் என்னவென்றே புரியாத வயதில் நடந்த அது, என் வாழ்க்கையில் ஒரு இனிமையான நினைவாகவே இன்றும் உள்ளது" என அனுஷ்கா கூறியுள்ளார்.

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
