வானம் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்தது எதற்காக?- அனுஷ்கா ஷெட்டி
அனுஷ்கா
நடிகை அனுஷ்கா ஷெட்டி, ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ராஜ்ஜியம் செய்த பிரபலம்.
யோகா டீச்சரான அனுஷ்கா நாகர்ஜுனா நடித்த சூப்பர் என்ற படத்தில் அறிமுகமானார், கிளாமர், திறமை, அழகு என அனைத்தும் பொருந்திய நடிகையாக வலம் வந்தவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் அருந்ததி.
அதன்பிறகு மிகவும் கவனிக்கப்படும் நடிகையாக இருந்த அனுஷ்கா பாகுபலியில் அனைவரையும் மயங்க வைத்துவிட்டார். ஆனால் இப்போது அவர் அவ்வளவாக படங்கள் நடிப்பது இல்லை, ஏதோ 1, 2 என நடிக்கிறார்.
நடிகை பேட்டி
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் அனுஷ்கா ஷெட்டி பேசும்போது, என்னுடைய கெரியரில் நல்வாய்ப்பாக நல்ல கதைகளில் நடித்திருக்கிறேன். அருந்ததி படத்திற்கு பிறகு நான் ஒரு விலைமாதுவாக வானம் படத்தில் நடித்தேன்.
உடனே அருந்ததி மாதிரி கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு இப்படிபட்ட ரோலில் ஏன் நடிக்கிறீர்கள் என கேட்டார்கள். ஆனால் எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது, அதனால் அதில் நடித்தேன்.
எனக்கு ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று தோன்றினால் அது எனக்குள் லாக் ஆகிவிடும். அதனால் எந்த நடந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பேன் என கூறியுள்ளார்.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
