44 வயதாகும் அனுஷ்கா ஷெட்டிக்கு இந்த வருடம் திருமணம்? மாப்பிள்ளை பற்றி கசிந்த தகவல்
நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது உடல் எடையை குறைக்க கடந்த பல வருடங்களாக சிகிச்சையில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. அதனாலேயே அவர் படங்களில் நடிப்பதையும் பல வருடங்களாக தவிர்த்து வருவதாகவும் கூறப்பட்டது. தற்போது மீண்டும் படங்களில் அவர் பிஸியாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரை பற்றியும் காதல் கிசுகிசுக்கள் இதற்கு முன் வந்திருக்கின்றன. ஆனால் அவர்கள் நட்பாக இருப்பதாக மட்டுமே விளக்கம் கொடுத்தனர்.

அனுஷ்காவுக்கு திருமணம்?
44 வயதாகும் அனுஷ்காவுக்கு எப்போது திருமணம் என்று தான் ரசிகர்கள் நீண்ட காலமாக கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் அனுஷ்காவுக்கு இந்த வருடம் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.
தொழிலதிபர் ஒருவர் உடன் தான் திருமணம் நடக்க போகிறதாம். அவரது குடும்பத்திற்கு தூரத்து சொந்தம் என்றும், திருமணத்திற்கு இரண்டு குடும்பத்தினரும் தயாராகி வருகிறார்கள் எனவும் தெலுங்கு மீடியாக்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
இருப்பினும் அனுஷ்கா திருமணம் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டால் தான் அது உறுதியாகும்.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி News Lankasri