அருந்ததி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது அனுஷ்கா இல்லை.. இந்த நடிகையா?
அனுஷ்கா
தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்தவர் அனுஷ்கா. சோலோ ஹீரோயினாக தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கினார்.
அதற்கு மிகவும் காரணமாக அமைந்த படம் என்றால், அது 'அருந்ததி' தான். கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து மனோரமா, Sayaji Shinde, கைகாலா சத்யநாராயணா ஆகியோர் நடித்திருந்தனர்.
Sonu Sood வில்லனாக மிரட்டியிருப்பார். ஆனால், இப்படத்தில் அனுஷ்காவின் நடிப்பு பெரும் அளவில் பாராட்டை பெற்றது. இருப்பினும் இப்படத்தில் நடிக்க முதலில் அனுஷ்கா தேர்வாகவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
இந்த நடிகையா?
ஆம், இப்படத்தில் நடிக்க மம்தா மோகன்தாஸை தான் தயாரிப்பாளர்கள் முதலில் அணுகியிருந்தனர். அவர் இந்த படத்தில் இருந்து விலகியதால் அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்தார்.