அட்லீ மீது உச்சக்கட்ட கோபத்தில் ஷாருக்கான்- இதனால் தானா?
ஜவான் திரைப்படம்
சினிமாவில் நுழைந்த சில வருடங்களிலேயே முன்னணி இயக்குனர்களின் லிஸ்டில் வந்தவர் அட்லீ. ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படத்தை தொடர்ந்து தமிழில் சினிமா நடிகர்களை இயக்குவார் என்று பார்த்தால் பாலிவுட் பக்கம் சென்றார்.
அங்கு டாப் நடிகரான ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு பூனேவில் தற்போது நடந்துவருவதாக கூறப்படுகிறது. ஆனால் இடையில் ஷாருக்கான் சென்னையில் நயன்தாரா வீட்டிற்கு வந்து சென்றபோது எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

கோபத்தில் ஷாருக்கான்
தற்போது ஷாருக்கான் இயக்குனர் அட்லீ மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் ஜவான் படத்தின் பட்ஜெட் முதலில் முடிவு செய்ததை விட அதிகமாகிக் கொண்டு செல்கிறதாம்.
இதனால் அட்லீ மீது ஷாருக்கான் கொஞ்சம் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.