விஜய், அஜித் பேசவே மாட்டார், ரஜினி இப்படி தான்.. ஏ.ஆர்.முருகதாஸ் உடைத்த ரகசியம்
ஏ.ஆர்.முருகதாஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மதராஸி படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இப்படி தான்
இந்நிலையில், அஜித் விஜய் என பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து படம் எடுத்த ஏ.ஆர்.முருகதாஸிடம் விஜய் பற்றி அஜித்தும், அஜித் பற்றி விஜய்யும் என்ன கூறியுள்ளனர் என்று கேள்வி எழுப்ப அதற்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " விஜய்யை பொருத்தவரை என்னிடம் சினிமா சம்பந்தமாக பேசுவாரே தவிர மற்ற எந்த நடிகர்கள் குறித்தும் ஒருபோதும் பேச மாட்டார். அதேபோல் அஜித் என்னிடம் சினிமா பற்றி கூட பேசவே மாட்டார்.
சினிமாவை தவிர மற்ற எல்லா விஷயங்களை பகிர்ந்து கொள்வார். ரஜினி சாருடன் பேசினால் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை கமல் மற்றும் பாலச்சந்தர் இவர்கள் இருவர் குறித்து பேசிக்கொண்டிருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.