மேடையில் ஆங்கிலத்தில் பேசிய மகனை தமிழில் பேச சொல்லி கலாய்த்த ஏ.ஆர்.ரகுமான்- வைரலாகும் வீடியோ

By Yathrika Aug 22, 2023 08:30 AM GMT
Report

ஏ.ஆர்.ரகுமான்

தமிழ் சினிமாவில் பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் ஏ.ஆர்.ரகுமான்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் இசையமைத்து உலகம் அறியும் இசையமைப்பாளராக இருக்கிறார்.

இப்போது தமிழில் தனுஷின் ராயன், கமல்ஹாசன்-மணிரத்னம் படம், ரஜினி மகள் ஐஸ்வர்யாவின் லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான், ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி என அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மேடையில் ஆங்கிலத்தில் பேசிய மகனை தமிழில் பேச சொல்லி கலாய்த்த ஏ.ஆர்.ரகுமான்- வைரலாகும் வீடியோ | Ar Rahman Asks His Son To Speak In Tamil

மகனை கலாய்த்த ரகுமான்

கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி கோவையில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மேடைக்கு வந்த தன்னுடைய மகனிடம் பயமா இருக்கா, இல்ல உற்சாகமா இருக்கா, பொண்ணுங்கலாம் பார்த்துட்டு இருக்காங்க என ரகுமான் சொன்னதும் ஆங்கிலத்தில் அமீன் பேசியுள்ளார்.

உடனே ஏ.ஆர்.ரகுமான் தமிழ்ல பேசுப்பா என கூற, அங்கிருந்த ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வமிடம் கதை கேட்டுள்ள ரஜினிகாந்த்- பின்பு நடந்தது என்ன? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US