எதிர்நீச்சல் சீரியல் இயக்குனர் திருச்செல்வமிடம் கதை கேட்டுள்ள ரஜினிகாந்த்- பின்பு நடந்தது என்ன?
எதிர்நீச்சல் சீரியல்
திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் எதிர்நீச்சல். இந்த சீரியல் மொத்தமும் பெண்களை மையப்படுத்தியே உள்ளது.
இப்போது கதையில் குணசேகரன் ஏற்பாடு செய்தவர்கள் ஜீவானந்தத்திற்கு பதிலாக அவரது மனைவியை சுட்டுவிடுகிறார்கள், அதேபோல் அப்பாவை வீட்டின் அறையில் அடைத்து வைக்கிறார்கள்.
அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
திருச்செல்வம்-ரஜினி
அண்மையில் ஒரு பேட்டியில் திருச்செல்வம், எந்திரன் பட ரிலீஸ் நேரம் அது, என்னைப்பார்த்ததும் ரஜினி அவர்கள் திருச்செல்வம் என அழைத்தார். என் பெயரை எல்லாம் அவர் எப்படி தெரிந்து வைத்திருந்தார் என்று தெரியவில்லை.
எப்படி ஒரு ஆள் 1500 எபிசோடுகளுக்கு திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கவும் செய்கிறீர்கள் என கேட்டார். அவர் கதை ஏதாவது எழுதி இருக்கீங்களா என்று கேட்டதும் அந்த டைம் நான் எழுதி வைத்திருந்த ஹீரோயின் சப்ஜெக்ட் கதையை அவரிடம் சொன்னேன்.
நல்ல கதை, ஆனா அது ஹீரோயின் சப்ஜெக்ட் ஆக இருக்கு என்று சொன்னார். அவர் என்னிடம் கதை கேட்கிறார் என புரிந்தது, அதன்பிறகு அவரை சந்திக்கவில்லை என கூறியுள்ளார்.
தனது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் நகுல்- வீடியோவுடன் இதோ