'மலிவான அரசியல் செய்கிறார்கள்'..மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சியின் குளறுபடிக்கு ஏ.ஆர் ரஹ்மானின் மகள் பதிவு
மறக்குமா நெஞ்சம்
கடந்த 10 -ம் தேதி சென்னை உள்ள ஓ.எம்.ஆர் சாலையில் நடைபெற்ற ஏ.ஆா். ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரியைக் காண ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்.
25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தற்போது பல பேர் இணையப்பக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் திட்டி தீர்த்து வருகின்றனர்.
மலிவான அரசியல் செய்கிறார்கள்
இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மானின் மகள், " இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடியில் மலிவான அரசியல் செய்கிறார்கள்.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதே 100% தவறு, இருந்தும் தன் தந்தை மோசடி செய்ததை போல் பேசுகிறர்கள்". "
"வெள்ளம், கோவிட் காலங்களில் இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டியவர் தன் தந்தை" என ஏ.ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இசைக் கச்சேரியில் ஏற்பட்ட பிரச்சனை, ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக யுவன் ஷங்கர் ராஜா அறிக்கை- இதோ