ஏ.ஆர். ரகுமான் அணிந்த ஆடை இத்தனை லட்சத்திற்கு விலைபோனதா?- வெளிவந்த தகவல்

dress arrahman musicdirector auctioned
By Yathrika Mar 22, 2022 12:20 PM GMT
Report

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், தமிழக மக்கள் பெருமையுடன் கொண்டாடும் ஒரு பிரபலம். ஆஸ்கர் வரை சென்றும் அவரின் குணத்தில் ஒரு மாற்றமும் இல்லாமல் எப்போதும் எல்லோருடனும் சகஜமான பழகக் கூடியவர்.

ஏ.ஆர். ரகுமானின் இசைப் பயணம்

ரோஜா படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் இப்போதும் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். யாரிடமும் இல்லாத சிறப்பாக உலகத்தில் இருக்கும் இசைக் கருவிகளை பற்றி ஆராய்ந்து அவற்றை வைத்து புதிய இசையில் பாடல்கள் கொடுப்பார்.

அடுத்து ரகுமானின் இசையில் பொன்னியின் செல்வன் படம் வர இருக்கிறது, அப்பட பாடல்களுக்காக ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங்.

ஏ.ஆர். ரகுமான் அணிந்த ஆடை இத்தனை லட்சத்திற்கு விலைபோனதா?- வெளிவந்த தகவல் | Ar Rahman Dress Auctioned For Lakhs

ஏலம் போன ரகுமானின் உடை

ராஜஸ்தான் காஸ்மோ க்ளப் அறக்கட்டளையில் 28ம் ஆண்டு நிறுவன தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏ.ஆர். ரகுமான் பயன்படுத்திய வெள்ளி நிற ஆடை ஏலத்திற்கு விடப்பட்டது.

அதை 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார் பிரமோத் சுரடியா என்பவர். இதில் ஏலம் மூலம் வரும் பணம் ஆதரவற்றோருக்கு உதவ பயன்படுத்தப்படுமாம்.

நடிகர் விஜய்காக எழுதிய கடிதத்தை கொடுக்க முடியாததால் மூதாட்டி உருக்கம் ! 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US