தற்கொலை செய்ய சென்ற நபரை காப்பாற்றிய ஏ.ஆர்.ரகுமான்- நெகிழ்ச்சியான சம்பவம்
ஏ.ஆர்.ரகுமான்
இசை ஜாம்பவான் ஏ.ஆர்.ரகுமான் தனது இசையால் இந்திய சினிமாவை தாண்டி பல மொழி கலைஞர்களையும் ஈர்த்த ஒரு பிரபலம்.
தேசிய விருது, Golden Globe, Oscar என பல விருதுகளுக்கு சொந்தக்காரரான ஏ.ஆர்.ரகுமான் இசையில் அண்மையில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி இருந்தது, படத்திற்கான இசைக்கு நல்ல பாராட்டு கிடைத்தது.

நெகிழ்ச்சி சம்பவம்
மலேசியாவை சேர்ந்த செல்வகுமார் என்பவர் ஒரு இசை கலைஞர். இவர் தனது டுவிட்டரில் 2015ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி நள்ளிரவு தற்கொலை செய்ய முயற்சி செய்தேன், அப்போது என் நண்பரிடம் இருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற நானே வருகிறேன் பாடல் இருந்தது. அதனைக் கேட்டப் பிறகு என் மனம் எப்படி மாறியது என்று தெரியவில்லை.
வீட்டிற்குச் சென்று எனது ஹெட்ஃபோன்கள் மூலம் கிட்டத்தட்ட 48 மணிநேரம் திரும்பத் திரும்ப கேட்டு என் அறையை பூட்டிக் கொண்டேன்.
விட்டுக்கொடுக்காத வாழ்க்கை எவ்வளவு மதிப்புள்ளது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன் என பதிவு செய்துள்ளார்.
அவரின் பதிவிற்கு ஏ.ஆர்.ரகுமான், எல்லா புகழும் இறைவனுக்கே என தெரிவித்துள்ளார்,
எல்லா புகழும் இறைவனுக்கே! வாழ்க வளமுடன்? https://t.co/wrrsRwDYAl
— A.R.Rahman (@arrahman) July 6, 2023
நாளுக்கு நாள் வசூல் சாதனை செய்யும் மாமன்னன் திரைப்படம்- புதிய பிளானில் படக்குழு, என்ன தெரியுமா?
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri