அர்ச்சனாவுக்கும், அபிநய்க்கும் இப்படி ஒரு உறவு உள்ளதா?- பிரபலமே கூறிய தகவல்
சின்னத்திரையில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக இருந்து வருபவர் அர்ச்சனா.
ஆரம்பகட்டம்
ஜெயா தொலைக்காட்சியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கிய அவர் பின் சன் டிவிக்கு பக்கம் சென்றார். அங்கு இளமை புதுமை, நகைச்சுவை நேரம் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
ரீ-எண்ட்ரீ
இடையில் மீடியா பக்கம் வராமல் இருந்த அர்ச்சனா 2009ம் ஆண்டு முதல் விஜய், ஜீ தமிழ் என தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். விஜய்யில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு கொஞ்சம் மோசமான பெயரை பெற்றார்.
அர்ச்சனா பதிவிட்ட புகைப்படம்
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ள அர்ச்சனா, பிக்பாஸ் புகழ் அபிநயுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதாவது அர்ச்சனா மற்றும் அபிநயின் அம்மாக்கள் இருவரும் பள்ளி கால நண்பர்களாம், அப்போது இருந்து தாங்களும் நண்பர்கள் என அர்ச்சனா பதிவிட்டுள்ளார்.
திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்திற்கு ஏற்பட்ட மாரடைப்பு- சோகத்தில் குடும்பம்