தவறான வார்த்தைகள் மூலம் கமெண்ட்.. பதிலடி கொடுத்த அர்ச்சனா மகள் சாரா
அர்ச்சனா
பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் தான் அர்ச்சனா. இவரும் இவரது மகள் சாரா இருவரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தில் நடித்து இருந்தனர் .
சில வருடங்களுக்கு முன்பு சாரா கொடுத்த பேட்டியில் சில காட்சிகளை எடுத்து சாராவுக்கு இவ்வளவு மெச்சூரிட்டியா என தலைப்பு வைத்து அந்த சேனல் பதிவிட்டு இருந்தனர்.
இதற்கு சிலர், போதுமான மெச்சூரிட்டி இல்லை என்றும் இன்னொரு தரப்பு அதிகமான மெச்சூரிட்டி இருக்கிறது என்று தவறான வார்த்தைகள் மூலம் பதிவிட்டு இருந்தனர் .
பதிலடி
இந்நிலையில் இது குறித்து பேசிய சாரா, ஏன் என்னுடைய மெச்சூரிட்டி இன்னும் மீடியாவில் விவாதப்பொருளாக மாறியுள்ளது? நான் என்னுடைய பயணத்தை ஆரம்பிக்கும் முன்னரே என்னை மோசமாக விமர்சனம் செய்கிறார்கள்.
என்னுடைய குணத்தை தாக்கி பேசுகிறீர்கள். கொஞ்சம் யோசித்து பாருங்கள் இதனால் எங்களுடைய குடும்பம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருக்கும் என்று கூறியுள்ளார் சாரா.
இதோ அந்த பதிவு

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
