பாலிவுட் படத்தில் அர்ஜுன் தாஸ்.. அதுவும் மிகப்பெரிய ஹீரோவுக்கு வில்லன்
அர்ஜுன் தாஸ்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார் அர்ஜுன் தாஸ். இந்த ஆண்டு வெளிவந்த குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.
இதை தொடர்ந்து bomb எனும் படத்தில் ஹீரோவாக, மிகவும் யதார்த்தமாக நடித்திருந்தார். அடுத்ததாக இவர் நடிப்பில் OG படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கு வில்லனாக நடித்துள்ளார்.
பாலிவுட் என்ட்ரி
இந்த நிலையில், தென்னிந்திய சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ், பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநரும் நடிகருமான ஃபர்ஹான் அக்தர் இயக்கத்தில் அடுத்ததாக டான் 3 படம் உருவாகவுள்ளது.
இப்படத்தில் ரன்வீர் சிங் , க்ரித்தி சனோன் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தில் வில்லனாக நடிக்க அர்ஜுன் தாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது.
இது மட்டும் நடந்தால், டான் 3 படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் களமிறங்குகிறார் அர்ஜுன் தாஸ். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.