அர்ஜுன் முகத்தை மாற்றியமைக்கும் லோகேஷ்.. ஹிஸ்டரி ஆஃப் வைலென்ஸ் தழுவல் என உறுதி
லியோ அர்ஜுன்
லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் விஜய் சண்டைபோடும் காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் அர்ஜுனின் பாதி முகத்தை ப்ரொஸ்தடிக் மேக்கப் வைத்து மாற்றியமைத்துள்ளாராம் லோகேஷ்.
ஏற்கனவே இப்படம் ஆங்கிலத்தில் வெளிவந்த எ ஹிஸ்டரி ஆஃப் வைலென்ஸ் படத்தின் தழுவல் என்பது போல் தகவல் தெரிவித்திருந்தனர். ஆனால், இதுகுறித்து படக்குழு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்த படத்தின் தழுவலா
இந்த நிலையில் தற்போது அர்ஜுனின் முகத்தை எப்படி லோகேஷ் மாற்றியமைத்துள்ளாரோ, அதே போல் ஹிஸ்டரி ஆஃப் வைலென்ஸ் படத்தில் வரும் Edie Stall எனும் கதாபாத்திரத்திற்கு ஒரு பக்க முகம் சிதைந்துபோனது போல் இருக்கும்.
இதனால், கண்டிப்பாக லியோ, எ ஹிஸ்டரி ஆஃப் வைலென்ஸ் படத்தின் தழுவல் தான் என திரை வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.
படையப்பா படத்தில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்? தற்போது கண்டுபிடித்த ரசிகர்