இன்று பிறந்தநாள் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசன்.. அசரவைக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்றும் அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன்.
இவர் நடிப்பில் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வசூல் பெறாமல் தோல்வி அடைந்தது.
அதை தொடர்ந்து, கமல்ஹாசன் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். கமல் ஹாசனுடன் இணைந்து இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

இன்று கமல்ஹாசன் பிறந்தநாள் என்பதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவினர் ஸ்பெஷல் டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவர் மக்கள் நீதி மையம் என்ற கட்சியையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

கடைசியாக இவர் தயாரிப்பில் அமரன் படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
இந்நிலையில், இன்று தனது 70 - வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் கமல்ஹாசன் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 400 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri
திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu