தளபதி67 பூஜையில் பங்கேற்ற பெண் குழந்தை யார்? இந்த நடிகரின் மகள் தானா
தளபதி67
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் தற்போது கூட்டணி சேர்ந்து இருக்கின்றனர். தளபதி 67 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி முதல் வாரத்திலேயே பூஜையுடன் தொடங்கிவிட்டது. தற்போது அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக காஷ்மீருக்கு படக்குழுவினர் சென்று இருக்கின்றனர்.
இந்நிலையில் நேற்று படத்தின் பூஜை வீடியோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பெண் குழந்தை யார்?
பூஜை வீடியோவில் விஜய் மற்றும் த்ரிஷா அருகில் ஒரு சின்ன பெண் குழந்தையும் நின்று இருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. படத்தில் விஜய் மகளாக தான் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது.
தற்போது அந்த பெண் குழந்தை யார் என்கிற விவரம் வெளியாகி இருக்கிறது. பிரபல காமெடி நடிகர் அர்ஜுனனின் மகள் 'இயல்' தான் அவர்.
டிக்டிக்டிக், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடித்தவர் அர்ஜுன் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: வாரிசு ஓடிடி ரிலீஸ் தேதி வெளியானது! எப்போ தெரியுமா?



சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
