மிஷ்கின் போலி அறிவாளி, உலக சினிமாவை காப்பி அடித்து ஜெயிச்சவர்.. மேடையில் விளாசிய நடிகர் அருள்தாஸ்
இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் ஒரு பட விழாவில் மேடையில் பேசும்போது கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேடை நாகரிகம் இல்லாமல் பேசிய அவரை பிரபலங்கள் பலரும் கண்டித்து இருந்தனர். தற்போது பிரபல நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளரான அருள்தாஸ் மிஷ்கின் பற்றி கோபமாக பேசி இருக்கிறார்.
போலி அறிவாளி
"உலக படங்களை பார்த்திருக்கிறேன்னு சொல்றீங்க, உலகம் முழுக்க இருக்கும் புத்தகங்களை படிச்சிருக்கேன்னு சொல்றீங்க. என்ன அறிவு இருக்கு உங்களுக்கு, குறைந்தபட்சம் நாகரீகம் வேண்டாமா."
"ஒரு மேடையில் பேசுற பேச்சா இது. எல்லோருக்கும் பெண் குழந்தை இருக்கு. மேடை நாகரீகம் என்பது முக்கியம்."
"எல்லோரையும் சகட்டு மேனிக்கு வாடா என்கிறார், போடா என்கிறார். தொடர்ந்து பல மேடைகளில் இப்படி தான் பேசி வருகிறார் மிஷ்கின். "
"பாலாவை அவன் இவன் என்கிறார், இளையராஜாவை அவன் என்கிறார். யாருடா நீ? நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?"
"ஒரு போலி அறிவாளி. உலக சினிமாவை காபி அடித்து படம் பண்ணி ஜெயிச்ச போலி அறிவாளி மிஷ்கின்" என தாக்கி பேசி இருக்கிறார் அருள்தாஸ்.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
