தடம் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்.. அருண் விஜய் கிடையாதாம்
தடம் திரைப்படம்
மகிழ் திருமேணி இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தடம். இரட்டை வேடத்தில் நடித்து மிரட்டியிருந்தார் நடிகர் அருண் விஜய்.
இப்படத்தில் கதாநாயகியாக தான்யா ஹோப் திரில்லர் கதைக்களத்தில் அமைத்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றிபெற்றது.
முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா
இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது அருண் விஜய் கிடையாதாம். உதயநிதி ஸ்டாலின் தான் முதன் முதலில் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருந்தாராம்.
இயக்குனர் மகிழ் திருமேணி, உதயநிதிக்காக எழுதிய கதை தான் தடம். ஆனால், தயாரிப்பாளர் கிடைக்காத காரணத்தினால் இப்படத்தில் உதயநிதியால் நடிக்கமுடியாமல் போனதாம்.
இதன்பின் தான் அருண் விஜய்யிடம் கதையை கூறி ஓகே செய்துள்ளார் இயக்குனர் மகிழ் திருமேணி. தடம் படத்தை மிஸ் செய்துவிட்டோமே என்று எண்ணிய உதயநிதி மீண்டும் கலகத்தலைவன் எனும் திரைப்படத்தை மகிழ் திருமேணியுடன் கைகோர்த்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
ஐந்து நாட்களில் லவ் டுடே செய்த வசூல்.. பாக்ஸ் ஆபிசில் குவிந்து வரும் பல கோடி