ரஜினி இடத்தை பிடித்த அருண் விஜய்.. இந்த பொங்கல் செம கலெக்ஷன் அள்ளப்போகுது
பொங்கல் ரேஸ்
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு - துணிவு படங்கள் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றது. அதே போல் இந்த ஆண்டும் முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ளது.
ஆம், சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன. இதில், லைக்கா தயாரித்துள்ள ரஜினியின் லால் சலாம் படம் வெளிவரவிருந்த நிலையில், திடீரென தள்ளிப்போனது.
ரஜினி இடத்தில் அருண் விஜய்
இதனால் லால் சலாம் படத்திற்கு பதிலாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள அருண் விஜய்யின் மிஷன் திரைப்படம் வெளியாகிறது என அறிவித்தனர். ரஜினி படத்திற்கு பதிலாக பொங்கல் ரேஸில் அருண் விஜய்யின் படம் களமிறங்கியுள்ளது.
கேப்டன் மில்லர், அயலான், மிஷன் மற்றும் மெர்ரி கிறிஸ்துமஸ் என முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரும் நிலையில், கண்டிப்பாக இந்த வருட ஆரம்பமே வசூல் வேட்டையில் தமிழ் சினிமா பட்டையை கிளப்ப போகிறது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
