அருண் விஜய் அடுத்த படத்தை இயக்கப்போவது இவர்தான்.. லேட்டஸ்ட் அப்டேட்
அருண் விஜய்
தமிழ் சினிமா முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு இட்லி கடை மற்றும் ரெட்ட தல ஆகிய இரு படங்கள் வெளியாகின.

இதில் இட்லி கடை படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இவர் இரட்டை வேடத்தில் ஹீரோவாக நடித்து வெளிவந்த ரெட்ட தல படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.
அடுத்த படம்
அண்மையில் தனது குடும்பத்துடன் திருப்பதி சென்றிருந்தார் அருண் விஜய். இந்த நிலையில், அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது நடிப்பில் அடுத்ததாக உருவாகவுள்ள படம் குறித்தும், யார் இயக்குநர் என்பது குறித்தும் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது "என்னுடைய அடுத்த படத்தை இயக்குநர் முத்தையா இயக்குகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் தொடங்குகிறது" என கூறியுள்ளார்.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan