விஜய்க்கு என்றைக்கும் நம்முடைய சப்போர்ட் இருக்கும்.. நடிகர் அருண் விஜய் ஓபன் டாக்
அருண் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் ரெட்ட தல. இயக்குநர் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகிறது.

இப்படத்தின் புரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதற்காக சமீபத்தில் பத்திரிகையாளர்களை அருண் விஜய் சந்தித்தார். அப்போது பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்ட அவர், விஜய்யின் கடைசி படம் குறித்தும் அஜித் குறித்தும் வெளிப்படையாக பேசினார்.
ஓபன் டாக்
அவர் கூறியதாவது: "தளபதியின் ஜனநாயகன் படத்திற்கு வைட்டிங், விஜய்யின் கடைசி படம் என்பது எனக்குமே கஷ்டம்தான். என்றைக்கும் அவருக்கு நம்முடைய சப்போர்ட் இருக்கும்".

"நடிகர் அஜித்தின் நம்பிக்கை ரொம்ப பிடிக்கும், சரியான வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பேன்" என கூறியுள்ளார்.