கொரோனாவால் இறந்த மனைவி குறித்து ஸ்பெஷல் பதிவு போட்ட அருண்ராஜா- எமோஷ்னல் போஸ்ட்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களில் ஒருவர் அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயனுடன் ஆரம்ப கட்டத்தில் கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்த இவர் பின் படங்களில் பணிபுரிய ஆரம்பித்தார்.
சினிமா பயணம்
ஆரம்பத்தில் படங்களில் வசனகர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும் வலம் வந்தார். பின் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார்.
சினிமாவில் மெல்ல மெல்ல மேலே வந்த அருண் ராஜாவிற்கு கொரோனா பெரிய இழப்பை ஏற்படுத்தியது. அதாவது அவர் மனைவி ராதிகா கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அருண்ராஜா போட்ட பதிவு
இந்த நிலையில் அவரது மனைவி ராதிகாவிற்கு இன்று பிறந்தநாளாம். அவரது புகைப்படத்தை பதிவிட்டு, உன்னை மிஸ் செய்கிறேன், பிறந்தநாள் வாழ்த்து என பதிவு செய்துள்ளார்.
Missing you Always , Happy birthday Paapi ❤️ pic.twitter.com/crBOX1QvlX
— Arunraja Kamaraj (@Arunrajakamaraj) April 19, 2022