கீழே விழுந்து கை, கால் வரல, பேச முடியவில்லை, பிராத்தனை செய்யுங்கள்- கண்ணீருடன் சீரியல் நடிகை ப்ரீத்தா வெளியிட்ட வீடியோ
சின்னத்திரையில் 90களில் கலக்கிய மக்களுக்கு பிடித்த பிரபலமான ஜோடிகள் இருக்கிறார்கள். அதில் ஒரு ஜோடி தான் ராகவ் மற்றும் ப்ரீத்தா. இவர்கள் இருவரும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள்.
ராகவ் நடிகராக மட்டும் இல்லாமல் கம்போஸர், தொகுப்பாளர், இயக்குனர் என பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.
ராகவ் திரைப்பயணம்
நல்ல நடன கலைஞரான இவர் ஜோடி நம்பர் 1, டான்ஸ் ஜோடி டான்ஸ், மானாட மயிலாட போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார். அதன்பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.
இடையில் நடிகை ப்ரித்தாவுடன் காதல் ஏற்பட இருவரும் திருமணமும் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஒரு பெண் இருக்கிறார்.
சோகமான வீடியோ வெளியிட்ட ப்ரீத்தா
சமூக வலைதளங்களில் சமையல் மற்றும் ஆன்மீகம் பற்றிய விஷயங்களை பகிர்ந்து வரும் ப்ரீத்தா தற்போது சோகமாக விஷயம் ஒன்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதாவது அவரது கீழே விழுந்ததில் கை, கால்கள் வரவில்லையாம், அதோடு அவரால் பேசவும் முடியவில்லையாம்.
அவர் விரைவில் குணமடைய அனைவரும் பிராத்தனை செய்யுங்கள் என்று சோகத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளார் ப்ரீத்தா.
பீஸ்ட் படத்தை கலாய்த்த பாடகர் ஸ்ரீனிவாஸ்: கடும் கோபத்தில் விஜய் ரசிகர்கள்