கமல் ரசிகன், விஜய் ரசிகன் என ஓட்டு போட மாட்டேன்- ஓபனாக கூறிய அரவிந்த் சாமி
விஜய்
தமிழ் சினிமாவில் படங்கள் குறித்து செய்திகள் வந்தால் கூட இவ்வளவு கொண்டாட்டம் இருக்குமா என தெரியவில்லை.
நடிகர் விஜய் நேற்று, ஜனவரி 2, தான் அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் எனவும் பெயர் வைத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டார்.
அதோடு இப்போது ஒப்புக்கொண்டுள்ள படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்தார்.
விஜய் அரசியலுக்கு வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் அவர் இனி படங்கள் நடிக்க மாட்டார் என்பது கடும் துக்கமாக ரசிகர்களுக்கு அமைந்துவிட்டது.
அவரது அறிக்கை வெளியானதில் அனைவரும் நிறைய கருத்து கூறி வருகிறார்கள்.

அரவிந்த் சாமி பேச்சு
இந்த நிலையில் நடிகர் அரவிந்த் சாமி பிரபலங்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்து பேசியுள்ளார். அதில் அவர், ரஜினி, கமல், விஜய் ஆகியோரை பிடிக்கும், ரசிகன், ஆனால் அதற்காக அவர்களுக்கு ஓட்டு போட மாட்டேன். ரசிகன் என்பது வேறு அரசியல் என்பது வேறு.
அவர்கள் சொல்லும் விஷயத்தால் மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுமா? உங்களுடைய நல்ல எண்ணம், நோக்கம் முதலில் எனக்கு புரியணும், பிடிக்கணும். நீங்கள் இத்தனை வருடமாக ஹீரோவாக இருப்பதினால் நீங்கள் எல்லோரையும் காப்பாற்றலாம் என்ற ஒரு மைன்ட்செட்டில் கூட இருக்கலாம்.
நீங்கள் தமிழ்நாட்டினுடைய தலைவராகவதற்கான கொள்கைகளை கையாளும் திறமை இருக்கிறதா என்பதையெல்லாம் பார்த்து தான் ஓட்டு போடுவேன் என பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri