கமல் ஹாசனின் முக்கிய படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட அரவிந்த் சாமி.. என்ன படம் தெரியுமா
கமல் ஹாசன்
உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு இந்தியன் 3 மற்றும் தக் லைஃப் என இரண்டு திரைப்படங்கள் வெளிவரவுள்ளது. இதனை எதிர்பார்த்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
கமல் ஹாசனின் சிறந்த திரைப்படங்கள், வெளிவந்த நேரத்தில் மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்காது. ஆனால், காலங்கள் கடந்த நிலையில், அந்த படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அன்பே சிவம், ஹேராம் போன்ற படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்.
அப்படி காலம் கடந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் கமல் ஹாசனின் படங்களில் ஒன்று தான் உத்தமவில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு கமல் ஹாசன் தான் கதை மற்றும் திரைக்கதை எழுதியிருந்தார். இப்படத்தில் கமலுடன் இணைந்து இயக்குனர் கே. பாலசந்தர், கே. விஸ்வநாத், நாசர், ஊர்வசி, ஜெயராம், எம்.எஸ். பாஸ்கர், பூஜா குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.
வாய்ப்பை தவறவிட்ட அரவிந்த் சாமி
இந்த நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த் சாமிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இப்படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போயுள்ளது. இதனை அரவிந்த் சாமி பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.