பிக் பாஸ் சர்ச்சை போட்டியாளரை வெளியேற்றிய கமல்.. எலிமினேஷன் பற்றி உறுதியான தகவல்
பிக் பாஸ்
பரபரப்பு, சர்ச்சைகளுக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல் தற்போது பிக் பாஸ் 6ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு மணி நேர எபிசோடு மட்டுமின்றி, ஹாட்ஸ்டாரிலும் 24 மணி நேரமும் இந்த ஷோ ஒளிபரப்பாவதால் ரசிகர்கள் போட்டியாளர்கள் பற்றி பல விஷயங்களை தெரிந்தகொள்கின்றனர்.
கடந்தவாரம் சாந்தி எலிமினேட் ஆன நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போவது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.
எலிமினேஷன்
தற்போது மக்கள் வாக்குகள் அடிப்படையில் அசல் கோளாறு தான் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
அவர் வீட்டில் நிவாஷினி, குயின்சி உள்ளிட்ட பல பெண்களிடம் தகாத முறையில் தொடும் காட்சிகள் தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வந்தது குறிப்பிடத்தக்கது.
அதனால் தற்போது அசல் கோளாறு வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தான் கொடுத்து இருக்கிறது.
விஷாலுடன் காதல் திருமணமா? உண்மையை சொன்ன நடிகை அபிநயா