ரூ. 3 கோடி பட்ஜெட், ரூ. 30 கோடி பிசினஸ் செய்த படம்.. நடிகர் அசோக் செல்வன் ஓபன் டாக்
Ashok selvan 3 crore budget movie made 30 crore: சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்படம் ரூ. 3 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ. 30 கோடி பிசினஸ் செய்தது என கூறியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அசோக் செல்வன்
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் வெளிவந்த தெகிடி, ஓ மை கடவுளே, கூட்டத்தில் ஒருத்தன், போர் தொழில், நித்தம் ஒரு வானம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளன.

அன்பில் அவன்
பல வெற்றி படங்களை தந்த அசோக் செல்வன் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் அன்பில் அவன். இப்படத்தை இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். செப்டம்பர் 25-ஆம் தேதி வெளிவரவிருந்த இப்படம், தற்போது தள்ளிப்போய் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாகிறது.

ஓ மை கடவுளே
சமீபத்திய பேட்டி ஒன்றில் திரைப்படங்களின் பிசினஸ் குறித்தும், அவற்றின் பட்ஜெட் குறித்தும் பேசும்போது, "ஓ மை கடவுளே திரைப்படத்தை ரூ. 3 கோடியில் எடுத்தோம், அது ரூ. 30 கோடி வரை பிசினஸ் செய்தது" என கூறியுள்ளார்.

சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri