கொரோனாவுடன் நடிகைக்கு முத்தம் கொடுத்த அசோக் செல்வன் 'மன்மத லீலை' !
இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படம் இயக்கும்போது கிடைத்த இடைவெளியில் இயக்கி இருக்கும் மன்மத லீலை. இந்த படத்தின் டீஸர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில் அதிகம் முத்த காட்சிகள் இருந்தது தான் அதற்கு காரணம்.
மன்மத லீலை ட்ரைலர்
நேற்று இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, அசோக் செல்வம், ஹீரோயின் ரியா சுமன், சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த படத்தின் கதையை தனது அசிஸ்டென்ட் தான் எழுதினார் என்றும், மிக குறைந்த நாட்களே ஷூட்டிங் செய்து எடுத்து முடித்து இருப்பதாக தெரிவித்தார்.

நடிகைக்கு கொரோனாவுடன் முத்தம்
அசோக் செல்வன் மேடையில் பேசும் போது, "இந்த நேரத்தில் இப்படி ஒரு அடல்ட் படம் நடித்தே ஆக வேண்டும் என திட்டமிட்டு நடிக்கவில்லை. நல்ல கதை, இயக்குனர்கள் உடன் பணியாற்ற வேண்டும் என்று தான் நினைக்கிறேன்."
"கொரோனா முதல் லாக்டவுன் முடிந்தபிறகு தான் வெங்கட் பிரபு இந்த கதையுடன் வந்தார். பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன். ஷூட்டிங் நடக்கும்போது எனக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது."
"கொரோனாவுடன் நான் நடிகைக்கு முத்தம் கொடுத்திருக்கிறேன். ஆனால் நல்ல வேலை அவருக்கும் கொரோனா தொற்றிகொள்ளவில்லை. அதனால் No women were harmed during the making of this film என நான் disclaimer போட சொல்கிறேன்" என அசோக் செல்வன் கூறி இருக்கிறார்.

கல்லி பாய் பட ராப் பாடகர் 24 வயதில் மரணம்! சினிமா நட்சத்திரங்கள் அதிர்ச்சி