போதை பொருள் விவகாரம்
தெலுங்கு திரையுலகில் முக்கிய தயாரிப்பாளரில் ஒருவர் கே.பி.சவுத்ரி. இவரை அண்மையில் போதை பொருள் வைத்திருப்பதாக கூறி போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவரிடம் இருந்த கொக்கைன் போதை பொருளை கைப்பற்றினர். இந்த தகவல் வெளியாகி திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பின் கே.பி.சவுத்ரியின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அது குறித்து ஆய்வு செய்தனர்.
அப்போது இவர் சில நடிகைகளுடன் பலமுறை பேசியதாக தெரியவந்துள்ளது. அவர் பேசியவர்கள் பட்டியலில் தெலுங்கு நடிகை அஷு ரெட்டி பெயர் இருப்பதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மறுப்பு தெரிவித்த நடிகை
இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை அஷு ரெட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "எனக்கு தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரியுடன் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நான் அவருடன் மணிக்கணக்கில் பேசவில்லை. இதை என்னால் நிரூபிக்கவும் முடியும். ஆனால் இதில் என்னை சம்பந்தப்படுத்தி என்னுடைய செல்போன் நம்பரை வெளியிட்டு உள்ளனர்.
இதனால் பல மிரட்டல்கள் எனக்கு வருகிறது. என்னால் அந்த செல்போன் நம்பரை பயன்படுத்த முடியாத அளவுக்கு செய்துள்ளனர். இவ்வாறு என்னை பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன்" என கூறியிருக்கிறார்.
மாமன்னன் படத்திற்காக ஃபகத் ஃபாசில் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
