விவகாரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்ட நடிகை அசின்.. வருத்தத்தில் ரசிகர்கள், ஆனால்
நடிகை அசின் இந்தியளவில் பிரபலமான நட்சத்திரம் என்பதை நாம் அறிவோம். குறிப்பாக தமிழில் விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அசின் விவாகரத்து
இவர் நடிப்பில் வெளிவந்த கஜினி, போக்கிரி, சிவகாசி போன்ற படங்கள் இன்றும் பலருடைய மனதை கவர்ந்த திரைப்படங்களாக இருக்கிறது. நடிகை அசின் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக நேற்று அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் வெளிவந்தது.
இதுகுறித்து அசின் தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால், தற்போது இதை பற்றி அசின் தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அசின் வெளியிட்ட அறிவிப்பு
இந்த பதிவில் எனக்கும் என் கணவருக்கும் விவாகரத்து ஆகவில்லை. நாங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம் என கூறியுள்ளார். மேலும் எங்களுக்கு விவாகரத்து என கூறி வரும் ஆதாரமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் இந்த விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அசினுக்கு விவாகரத்து என கூறியவுடன் அவருடைய ரசிகர்கள் வருத்தமடைந்தனர். ஆனால், இந்த தகவல் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
நடிகை குஷ்பூவின் மகளா இது! ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
