நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் ஜவான் இந்த படத்தின் காப்பியா?- வெடித்த புகார்
அட்லீ பயணம்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி பின் ஆர்யா-நயன்தாராவை வைத்து ராஜா ராணி என்ற படத்தை இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வர தொடங்கியவர் அட்லீ.
இப்படம் கொடுத்த மாபெறும் வெற்றி இரண்டாவது படமே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பின் தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என இயக்கிய அட்லீ இப்போது பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடக்க ஷாருக்கான், ரஜினி, விஜய், அனிருத் போன்றவர்களுடன் நேரத்தை கழித்துள்ளார்.
ஜவான் கதை காப்பியா
இந்த ஜவான் படத்தின் படப்பிடிப்பு ஓரளவிற்கு முடிந்துள்ள நிலையில் தற்போது கதை குறித்து பிரச்சனை எழுந்துள்ளது. அதாவது ஜவான் திரைப்படம் விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதை என சொல்லப்படுகிறதாம்.
இதுகுறித்து மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.
அஜித்தின் 63வது படத்தை இயக்கப்போவது இந்த இயக்குனரா?- எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்