இயக்குநர் அட்லீ வாங்கியுள்ள புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார்.. விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
அட்லீ
இயக்குநர் அட்லீ இன்று எவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். தமிழில் தனது பயணத்தை தொடங்கிய இவர், இன்று உலகளவில் புகழை அடைந்துள்ளார்.

கடைசியாக இவர் இயக்கத்தில் வெளிவந்த ஜவான் படம் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இப்படத்தின் மூலம் ஷாருக்கானுக்கு முதல் தேசிய விருது கிடைத்தது. அதுமட்டுமின்றி அட்லீக்கு பாலிவுட் சினிமாவில் தனி இடமும், மரியாதையும் கிடைத்துள்ளது. அம்பானி வீட்டு திருமணத்திற்கு கூட இவரை அழைத்திருந்தனர். அந்த அளவிற்கு மாபெரும் உச்சத்தை தொட்டுள்ளார்.

அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
ரோல்ஸ் ராய்ஸ்
தமிழ் திரையுலகை சேர்ந்த தளபதி விஜய், இயக்குநர் ஷங்கர், தனுஷ், ரஜினிகாந்த், ஹன்சிகா மற்றும் லெஜெண்ட் சரவணன் ஆகியோர் ரோல்ஸ் ராய்ஸ் கார் சொந்தமாக வைத்துள்ளனர். இதில் விஜய் சமீபத்தில் தனது காரை விற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இவர்களுடைய வரிசையில் அட்லீயும் இணைந்துள்ளார்.

ஆம், இயக்குநர் அட்லீ புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் என்கிற காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ரூ. 7.50 கோடி முதல் ரூ. 9.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மும்பை தனியார் விமான நிலையத்திற்கு அட்லீ தனது குடும்பத்துடன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வந்து இறங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ பாருங்க:
#Atlee in his brand new Rolls Royce Spectre spotted in Mumbai pvt airport..🔥#Rollsroyce pic.twitter.com/1vrzS96pSU
— balamurugan (@chefbalaa) October 25, 2025