ஒரு நாள் வருத்தப்படுவாங்க: அட்லீ ஏன் இப்படி ஒரு பதிவை போட்டார்? அந்த நடிகர் பற்றி தானா
இயக்குனர் அட்லீ தன்னை ஏளனப்படுத்துபவர்கள் பற்றி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். யாரை பற்றி இப்படி மறைமுகமாக பதிவிட்டு இருக்கிறார் என ரசிகர்கள் குழப்பம் அடைந்து இருக்கின்றனர்.
அட்லீ
ஷங்கருக்கு உதவி இயக்குனராக இருந்து அதன் பின் ராஜா ராணி படம் மூலமாக இயக்குனர் ஆனவர் அட்லீ. அவர் கடைசியாக விஜய்யின் பிகில் படத்தை தான் இயக்கி இருந்தார். அதற்கு பிறகு பாலிவுட் நடிகர் ஷாருக் உடன் கூட்டணி சேர்வதாக அறிவித்தார்.
அந்த படம் பற்றிய அறிவிப்பு வந்ததோடு சரி, மூன்று வருடங்கள் ஆகியும் இன்னும் அது தொடங்கவே இல்லை. கதையில் சில மாற்றங்கள் செய்ய சொல்லி ஷாருக் கேட்டதாகவும் அதை அட்லீ செய்து வருவதாகவும் முன்பே தகவல் வந்தது.
இந்த ப்ராஜெக்ட் எப்போது தொடங்கும் என அட்லீ மட்டுமின்றி அவரது ரசிகர்களும் அதிகம் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
பிக் பாஸ் பாவனியா இது? அட்டைப்படத்திற்கு எப்படி போஸ் கொடுத்திருக்கிறார் பாருங்க
தவறாக நடத்தியது யார்?
இந்நிலையில் அட்லீ இன்ஸ்டாகிராமில் தன்னை தவறாக நடத்தியவர்கள் ஒருநாள் வருத்தப்படுவார்கள் என குறிப்பிட்டு பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
"A time will come in your life when some people will regret why they treated you wrong. Trust me it will definitely come" என அட்லீ குறிப்பிட்டு இருக்கிறார்.
ஷாருக் கான் பற்றி இப்படி பதிவிட்டாரா அல்லது வேறு யாரை பற்றி இப்படி சொன்னார் என்பது அட்லீக்கு தான் வெளிச்சம்.