அவதார்-2 ரிலீஸில் புது சிக்கல்! சொன்னபடி ரிலீஸ் ஆகுமா?

By Parthiban.A Dec 04, 2022 05:30 PM GMT
Report

உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் தற்போது இயக்கிய "அவதார் 2 தி வே ஆஃப் வாட்டர்" திரைபடம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வெளியாவதில் சிக்கல் தொடங்கி உள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 வெளியான அவதார் திரைப்படம் மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. உலகமெங்கும் அவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. அவதார் திரைப்படம் உலகத்திலேயே அதிகம் வசூலித்த டாப் 10 படங்களில் இன்று வரை முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்தியாவில் அதிக வசூலை அள்ளிய அவதார், தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் "அவதார்-2 தி வே ஆஃப் வாட்டர்" திரைப்படம் டிசம்பர் 16ல் வெளியாக உள்ளது.

அவதார்-2 ரிலீஸில் புது சிக்கல்! சொன்னபடி ரிலீஸ் ஆகுமா? | Avatar 2 Kerala Tn Theaters Share Issue

ஷேர் பிரச்சனை

சமீபத்தில் அவதார்-2 படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் திரையரங்கு உரிமையாளர்களிடம் விநியோகஸ்தர்கள் அதிக ஷேர் கேட்டு வந்தனர் என்றும், இதற்கு கேரளா தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டிலும் இப்போது இதே பிரச்சனை கிளம்பியுள்ளது, அவதார் 2 படத்தினை டப்பிங் செய்து விநியோகம் செய்யும் நிறுவனம் திரையரங்குகளிடம் அதிக ஷேர் கேட்பதால் பிரச்சனை எழுந்துள்ளது.

கடைசி நேரத்தில் இப்படி ஒரு சிக்கல் வந்திருப்பது ரசிகர்களுக்கு தான் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் சொன்ன தேதியில் படம் வருமா? 

அவதார்-2 ரிலீஸில் புது சிக்கல்! சொன்னபடி ரிலீஸ் ஆகுமா? | Avatar 2 Kerala Tn Theaters Share Issue

ஹன்சிகா திருமணம் முடிந்தது.. வைரலாகும் ஜோடியின் வீடியோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US