அவதார் 2 படத்தை புறக்கணித்த பல முன்னணி தியேட்டர்கள்! இதுதான் பிரச்சனை.. ரசிகர்கள் ஏமாற்றம்

By Parthiban.A Dec 16, 2022 09:50 AM GMT
Report

அவதார் 2

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அவதார் 2 படம் திரைக்கு வந்திருக்கிறது. படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது.

உலக அளவில் அதிகம் வசூலித்த படங்களின் லிஸ்டில் தற்போதும் முதலிடத்தில் இருக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் இது என்பதால் இதுவும் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அவதார் 2 படத்தை புறக்கணித்த பல முன்னணி தியேட்டர்கள்! இதுதான் பிரச்சனை.. ரசிகர்கள் ஏமாற்றம் | Avatar The Way Of Water Not Released Many Theaters

புறக்கணித்த தியேட்டர்கள்

ஆனால் தமிழ்நாட்டில் பல முக்கிய தியேட்டர்களில் "அவதார் : தி வே ஆஃப் வாட்டர்" வெளிவரவே இல்லை. அதற்கு காரணம் டிஸ்னி நிறுவனம் மற்றும் தியேட்டர்கள் இடையே வருவாய் பங்கீடு தொடர்பாக ஒப்பந்தம் இறுதிவரை முடிவாகாதது தான்.

சென்னையில் ஜிகே சினிமாஸ், வெற்றி தியேட்டர் போன்ற பல முக்கிய தியேட்டர்களில் அவதார் : தி வே ஆஃப் வாட்டர் வெளிவரவில்லை. வழக்கமாக 50-50 ஆக இருக்கும் வசூல் பங்கீடு விகிதத்தை மாற்றி டிஸ்னி நிறுவனம் 70 சதவீதம் கேட்கிறது. இதனால் வந்த பிரச்சனை தான் இது.

இது ரசிகர்களுக்கு தான் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.  தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் பிரச்சனை தொடர்ந்து நடந்து வருகிறது.

திருமணமாகி 8 வருடங்களுக்கு பின் பிரியா கர்ப்பம்.. போட்டோவுடன் அட்லீ சொன்ன ஹேப்பி நியூஸ்! 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US