அவதார் 2 லாபமா, நஷ்டமா? இத்தனை ஆயிரம் கோடி தேவையா
அவதார் 2
உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தற்போது வரை நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது அவதார் படம். அதன் இரண்டாம் பாகம் 13 ஆண்டுகள் கழித்து கடந்த வருடம் டிசம்பர் 16ம் தேதி ரிலீஸ் ஆனது. இந்திய ரசிகர்கள் மத்தியிலும் அவதார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தியாவில் தற்போது வரை 358.20 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறது அவதார் 2. இன்னும் படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருப்பதால், விரைவில் அவென்ஜர்ஸ் எண்டு கேம் பட வசூலான 367 கோடி என்ற மைல்கல்லை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படம் அவதார் 2 தான்.
இன்னும் லாபம் இல்லை..
அவதார் 2 படத்தை மிக மிக அதிகம் செலவில் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து இருப்பதால் தற்போது உலக அளவில் 1.5 பில்லியன் டாலர்கள் வசூலித்தும் இன்னும் லாபத்தை பெறவில்லை.
2 பில்லியனுக்கும் அதிகம் வசூல் வந்தால் தான் break even என ஜேம்ஸ் கேமரூன் பேட்டியில் மறைமுகமாக கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனால் தற்போது இந்திய ரூபாய் மதிப்பில் 4000 கோடிக்கும் மேல் வசூலித்தால் தான் லாபத்தை அவதார் 2 பெற முடியும் என்கிற நிலை இருக்கிறது.
அஜித்துடன் AK 62 -வில் இணையும் விஜய் பட நடிகர்? மிரட்ட வரும் இன்னொரு வில்லன்