அவ்வை சண்முகி படத்தில் சிறுகுழந்தையாக நடித்த சிறுமியா இது?- ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே
அவ்வை சண்முகி
தமிழ் சினிமாவில் 1996ம் ஆண்டு கமல்-மீனா ஜோடியாக நடிக்க வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி.
நகைச்சுவையில் பட்டய கிளப்பிய இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்க கிரேஸி மோகன் திரைக்கதை எழுதியிருந்தார்.
இந்த படம் ஹாலிவுட் படமான Mrs Doubtfire (1993) என்ற படத்தின் தழுவல் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
நாயகன், நாயகியை தாண்டி நாகேஷ், ஜெமினி கணேசன், ஹீரா, மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.
சிறுகுழந்தை லேட்டஸ்ட்
இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த படத்தில் கமல்-மீனா குழந்தையாக ஆன் அன்ரா நடித்திருந்தார். இவர் கமலுடன் இணைந்து செய்த சேட்டைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தற்போது ஆன் அன்ரா அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அப்படத்திற்கு பிறகு சினிமா பக்கம் வராத அவர் தற்போது மாடலிங் மற்றும் தொழிலதிபராக விளங்கி வருகிறார்.