விஜய் இல்லை.. அஜித்துக்கு முன் பத்ம பூஷன் விருதை பெற்ற முன்னணி நடிகர்கள் யார் தெரியுமா?
அஜித் குமார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வரும் அஜித் குமார். சினிமாவை தாண்டி தனக்கு பிடித்த கார் ரேஸில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸில் அவர் 3ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். தற்போது அஜித் குமாருக்கு கலைத் துறையில் சிறந்த பங்களிப்பை கொடுத்ததற்காக இந்த ஆண்டு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு அஜித் ஒரு உருக்கமான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், தன் அப்பாவை மிகவும் மிஸ் செய்வதாகவும், அவர் அம்மா, மனைவி மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
யார் தெரியுமா?
இந்நிலையில், தற்போது அஜித்திற்கு முன் பத்ம பூஷன் விருதை பெற்ற 4 முன்னணி நடிகர்கள் குறித்து கீழே காணலாம்.
தமிழ் சினிமாவில் முதலில் இந்த விருதை பெற்றது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். இரண்டாவதாக இந்த மாபெரும் விருதை வென்றது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ரஜினிக்கு பின் இந்த விருது கமல்ஹாசனுக்கு கொடுக்கப்பட்டது. அதன் பின், கடைசியாக தமிழ் சினிமாவில் இருந்து மறைந்த விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த பட்டியலில் அஜித்தும் இணைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.