இறப்பதற்கு முன் இளையராஜா மகள் பவதாரிணி செய்த சேவை- வைரலாகும் வீடியோ இதோ
பவதாரிணி
எங்கும் ராஜா எதிலும் ராஜா என தமிழ் சினிமா ரசிகர்களை தனது இசை மூலம் கட்டிப்போட்டு வைத்துள்ளார் இளையராஜா.
இவரது வாழ்க்கையில் இந்த வருடம் ஒரு சோகமான விஷயம் நடந்தது. அதாவது இவரது ஆசை மகள் பவதாரிணி கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
அவரது மறைவு தமிழ் திரையுலகில் ஒரு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்பட்டது. தேசிய விருது வென்ற பாடகியாக பவதாரிணி மனதை மயக்கும் பாடல்கள் நிறைய தமிழில் பாடியுள்ளார்.
கோலாகலமாக திருமண நாளை கொண்டாடிய முத்து-மீனா- ஆனால் கடைசியில், சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பான புரொமோ
புதிய பாடல்
இந்த நிலையில் பாடகி பவதாரிணி பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழக பள்ளிக் கல்வித்துறையால் பெண் கல்வி, உரிமைகள், விடுதலை என்ற தலைப்பில் விழப்புணர்பு பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டதாம்.
அந்த பாடலை மறைந்த இளையராஜா மகள் பவதாரிணி தான் பாடியிருக்கிறார். தற்போது அந்த பாடலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டுவிட்டரில் பகிர்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார்.
தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி @ilaiyaraaja அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) May 16, 2024
பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக @tnschoolsedu-ஆல் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது. அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி… pic.twitter.com/46jMqaNghF