அயலான் திரை விமர்சனம்
அயலான்
தமிழ் சினிமா வர்த்தக ரீதியாக அடுத்த கட்டத்தை அடைந்தாலும், கண்டெண்ட் ரீதியாக ஒரு சில வட்டங்களை தாண்டுவதில்லை, அப்படி முதல் படத்திலேயே டைம் மிஷினில் வெற்றிகண்ட ரவிகுமார், இந்த முறை ஏலியன் ஜானரை கையில் எடுக்க இதிலும் வெற்றிகண்டாரா பார்ப்போம்.
கதைக்களம்
படத்தின் ஆரம்பத்திலேயே வேறு ஒரு கிரகத்தில் உள்ள கல் ஒன்று பூமியில் விழ, அது வில்லன் கைக்கு கிடைக்க, அவன் மைனிங் செய்து பூமியை ஓட்டை போட்டு சில ஆதாயங்களை தேட முயற்சிக்க, அப்போது அங்கிருந்து வெளிவந்த நச்சு வாயுவால் நிறைய மக்கள் இறக்கின்றனர்.
இதை அறிந்த அந்த கல் வந்த கிரகத்தில் வாழும் உயிரினம்(ஏலியன்) பூமி முக்கியம், அதை காப்பாற்ற ஒரு ஏலியனை அனுப்ப, அந்த ஏலியன் புளு, பூச்சிக்கு கூட துரோகம் நினைக்காத சிவகார்த்திகேயனிடம் தஞ்சம் கொள்கிறது.
பிறகு அந்த ப்ராஜெக்ட் சென்னைக்கு வர, சிவகார்த்திகேயன் மற்றும் அந்த ஏலியன் இருவரும் இணைந்து சென்னையை காப்பாற்றினார்களா என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஏலியன் இங்கு வந்தாலே உலகத்தை அழிக்கும் என்று பல ஹாலிவுட் படங்கள் பார்த்திருப்போம், ஆனால், ஏலியனால் நம் உலகம் காக்கப்பட போகிறது என்பதே கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது.
சிவகார்த்திகேயன் இன்று குழந்தைகளின் பேவரட் நாயகன், அதனாலேயே குழந்தைகள் கொண்டாடும் ஒரு படத்தை தந்துள்ளார்,
குட்டி யானையை முதல் காட்சியில் கப்பாற்றுவதிலிருந்து கடைசியில் ஒரு எறும்பு சிவகார்த்திகேயன், ஏலியனை கனேக்ட் செய்வது வரைக்கும் இந்த உலகம் அனைவருக்கும் சொந்தமானது என்பதை ரவிகுமார் பதிவு செய்துக்கொண்டே இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் மட்டும் இருந்தாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது, இதில் யோகிபாபு, கருணாகரன் என அவர்கள் டீம் அடிக்கும் ஒன் லைன் கவுண்டர் நல்ல ரீச். இவர்களுடன் ஏலியன் சேர்ந்து அடிக்கும் லூட்டி என இந்த பொங்கல் விருந்து,
அதிலும் படத்தின் சிஜி ஒர்க் இந்த பட்ஜெட்டில் தரமாக செய்துள்ளனர், வயலை அழிக்கும் வெட்டிக்கிளி, ரோபர்ட் சண்டைக்காட்சி என அனைத்து காட்சிகளிலும் அசத்தல். ஆனால், இந்த டெம்ப்ளேட் கதையெல்லாம் பல ஹாலிவுட் படங்களில் பார்த்தது தானே என்பதையும் தவிர்க்க முடியவில்லை, இதற்கு நாம் இந்த ஜானரை இத்தனை வருடம் தொடாமல் இருப்பதும் ஒரு காரணம்.
படத்தின் இரண்டாம் பாதி முக்கியமாக கிளைமேக்ஸ் இன்னும் விறுவிறுப்பை ஏற்றியிருக்கலாம், அந்த ஏலியன் பிரியாவிடை கொடுக்கும் போது ஸ்கிரீனில் மட்டுமே எமோஷ்னல் உள்ளது, ஆடியன்ஸிடம் இல்லை.
அதோடு கார்ப்ரைட் வில்லன், அட இந்த படத்திலுமா என்று கொஞ்சம் சலிப்பதை தட்டுகிறது, அதோடு வழக்கம் போல் நமக்கு மிகவும் அந்நியமான முகம், எப்போது தான் நமக்கு தெரிந்த முகங்களை கார்ப்ரைட் வில்லனாக போடுவார்களோ.
ஒளிப்பதிவு பிரமாண்டம், ரகுமான் பாடல்கள் ஏமாற்றம் என்றாலும், பின்னணி இசையில் முடிந்தளவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.
ஏலியன் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது ஸ்பீல்பெர்க் இயக்கிய E.T படம் தான், அந்த படத்தின் ட்ரெட் மார்க் ஷாட் ஆன, நிலா ஷாட்-யை ரவிகுமார் அயலானில் ரெபரன்ஸாக வைத்தது ரசிக்க வைத்துள்ளது.
க்ளாப்ஸ்
ஏலியன் சம்மந்தமான காட்சிகள்.
படத்தின் கிராபிக்ஸ் ஒர்க், கண்டிப்பாக இது சம்மந்தமான படங்களுக்கு முன்னோடியாக இருக்கும்.
குழந்தைகளுக்கான படமாக எடுத்து சென்றது.
பல்ப்ஸ்
கிளைமேக்ஸ் காட்சி இன்னமும் எமோஷ்னல் காட்சிகள் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
மொத்ததில் தமிழ் சினிமா நீண்ட இடைவேளைக்கு பிறகு குழந்தைகள் கொண்டாடும் ஒரு படமாக வந்துள்ளது இந்த அயலான்.