சூர்யா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான அயன் திரைப்பட கதை முதலில் இந்த நடிகரிடம் தான் கூறப்பட்டதா!
அயன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சூர்யாவின் திரைபயணத்தில் ஏகப்பட்ட மெகா ஹிட் திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது.
அப்படி அவர் நடிப்பில் வெளியான மெகா ஹிட் திரைப்படங்களில் ஒன்று அயன், இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு இப்படம் வெளியானது.
நிராகரித்த நடிகர்
பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இப்படம் மக்களிடையே பேராதரவை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. மேலும் தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை கொண்டாடும் ஆக்ஷன் திரைப்படமாக அயன் தான் திகழ்ந்து வருகிறது.
அப்படியான இப்படத்தின் கதையை இயக்குநர் கே.வி.ஆனந்த் நடிகர் விஜய்யிடம் தான் கூறியிருந்தாராம். ஆனால் அவர் மிக கமர்சியல் ஹீரோவாக, அவருக்கு இருக்கும் குடும்ப ரசிகர்களை மனதில் வைத்து கொண்டு இப்படத்தை நிராகரித்துவிட்டாராம்.
பின்னர் தான் இதில் சூர்யா நடித்து படம் மெகா ஹிட்டாக மாறியுள்ளது.
பிரபுவின் ஒரே மருமகளை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய குடும்ப புகைப்படம்