பிக் பாஸ் வீட்டில் கண்ணீர் விட்டு அழுத நடிகை.. காரணம் இந்த போட்டியாளர் தானா
பிக் பாஸ் 6 பிரம்மாண்டமாக கடந்த 9ஆம் தேதி துவங்கியது. இதில் ஜி.பி. முத்து, அசல் கோலார், ஆயிஷா , ராபர்ட் மாஸ்டர். ஜனனி, அசீம் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
புதிய டாஸ்க்
இதில் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு டாஸ்குகள் கொடுப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதிய டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.
அது என்ன டாஸ்க் என்றால், இதுவரை இந்த வீட்டில் இருக்கும் நபர்கள் மற்ற ஒரு சில போட்டியாளர்களுடன் பழகிக்கொள்ளாமல் இருக்குறீர்கள். அப்படி நீங்கள் பழக வேண்டும் என்று நினைக்கும் நபரை தேர்ந்தெடுத்து நீங்கள் ஏன் அவருடன் பழக வேண்டும் என்பதை சொல்லவேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அழுத நடிகை
இந்த டாஸ்கில் கலந்துகொண்ட அசல் கோலார், ஆயிஷாவை அழைத்து பேசுகிறார். அப்போது 'சொல்லு டா' என்று ஜாலியாக ஆயிஷா கூறியுள்ளார்.
இதை கேட்டவுடன் என்ன 'வாடா போடா' என்று கூப்பிடாதீர்கள் என கூறிவிட்டார். இந்த செயல் ஆயிஷாவிற்கு சங்கடத்தை கொடுத்துள்ளது. இதன்பின், 'சரி சொல்லுங்க' என்று ஆயிஷா கூறியுள்ளார். என்ன 'வாங்க போங்க' என்றும் கூப்பிடாதீர்கள் என்று அசல் கோலார் கூற மேலும் ஆயிஷாவிற்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது.
இதனால் டாஸ்க் முடிந்தவுடன் தனியாக சென்று அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார் ஆயிஷா. இதன்பின் இந்த விஷயத்தை போட்டியாளர்கள் சில ஆயிஷாவிடமும், அசல் கோலார் இடமும் பேசி முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
#Day02 #Promo03 #NowStreaming on #disneyplushotstar @ikamalhaasan #BiggBossTamil #KamalHassan pic.twitter.com/iLNxWXLFUX
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) October 11, 2022

விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan
