சுட்டும் விழி சுடரே சீரியலில் என்ட்ரி தரும் அய்யனார் துணை சீரியல் நடிகை.. அட இவரா!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுட்டும் விழி சுடரே சீரியலில், அய்யனார் துணை சீரியல் நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுட்டும் விழி சுடரே
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வினுஷா தேவி. இவர் தற்போது கதாநாயகியாக நடித்து வரும் சீரியல் சுட்டும் விழி சுடரே.

யுவன் மயில்சாமி இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், தற்போது 190 எபிசோட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது.

புதிய என்ட்ரி
இந்நிலையில், சுட்டும் விழி சுடரே சீரியலில் அய்யனார் துணை சீரியல் நடிகை தீப்தி என்ட்ரி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
